கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் டெல்லியில்தான் நாள்தோறும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இத்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில், பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்
இந்த ஊரடங்கு இன்று மாலை முதல் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விவேக் ராய் இன்று தற்கொலை செய்துகொண்டார்.
விவேக் ராய் கொரோனா வார்டில் ஒருமாதமாகப் பணியாற்றி வந்ததாகத் தெரிகிற்து. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக என கேள்வி எழுந்துள்ளது.