வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதன்படி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல கட்சிகள் இணைந்துள்ளன.
இக்கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரிடப்பட்டது. 3 வது கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
அதன்படி, இக்கூட்டணியில் 16 கட்சிகள் இணைந்திருந்த நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டணியின்போது, மொத்தம் 28 கட்சிகளைச் சேர்ந்த் 63 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பீகார் முதல்வர் நிதிஸ்குமார் மும்பைக்கு வருகை புரிந்த நிலையில், தற்போது இந்திய கூட்டணியின் கூட்டம் தொடங்கியுள்ளது.