Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் திடீர் திருப்பம்

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் திடீர் திருப்பம்
, வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (18:57 IST)
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் தன்னை கற்பழித்ததாக கேரளாவை சேர்ந்த கோட்டயதில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்ததோடு கடந்த சில நாட்களாக பிஷப்பை கைது செய்ய வேண்டுமென்று போராடியும் வருகிறார்.

கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் போலீசார் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயன்று வருவதாக கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டு தொடர்பாக ஜலந்தரில் உள்ள மிஷனரிஸ் ஆப் சபை கூறியுள்ளதாவது: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளித்துள்ள கன்னியாஸ்திரி தன்னுடன் ஒன்பது பேரை சேர்த்துக் கொண்டு பிஷப்புக்கு எதிரான சதிவேலை செய்து வருவதைக் கண்டறிந்துள்ளதாக  கூறியுள்ளது.

இந்த ஒன்பது பேரும் ஆலயத்தின் வருகை படிவேட்டை தங்கள் வசம் வைத்திருந்து இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் திருச்சபை சந்தேகம் எழுப்பியுள்ளது.இந்த நிலையில் தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி கூறுகிற தேதியில் அதாவது2015 மே23ல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததாக புகைப்படங்களை ஆதாரம் காட்டியுள்ளது.

எனவே  விசாரணை மேற்கொண்டுள்ள  போலீசாருக்கு இந்த வழக்கின் போக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள்: விரக்தியில் அழகிரி