கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் அவுரங்காபாத் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.