Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒரே நாளில் இந்தியாவின் மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

ஒரே நாளில் இந்தியாவின் மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!
, வியாழன், 16 ஜூலை 2020 (10:29 IST)
இந்தியாவில் இன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குஜராத் ராஜ்கோட்டில் காலை 7 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

அதேபோல இன்று அசாமில் கரிம்கஞ்ச் பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும், இன்று அதிகாலை 4 மணியளவில் இமாச்சல பிரதேசத்தின் உனாவ் பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் சிறிய அளவிலானதே என்றாலும் ஒரே நாளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 ஆயிரத்தை நெருங்கும் பலிகள்; 9.68 லட்சம் பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!