திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆகஸ்டு மாதம் வரை விற்று தீர்ந்தது பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக விடுமுறை காலம் என்பதால் திருப்பதி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மாதத்தில் அதிகமான பக்தர்கள் வருகையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக மக்கள் காத்திருந்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் தொடங்கிய நிலையில் சில நிமிடங்களுக்குள்ளாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இதனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இலவச தரிசனம் மூலமாகவே தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் வரும் மாதங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.