ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும் நிலையில் இன்றைய கூட்டத்தில் மக்களை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏழைகளுக்கு ஆதரவான மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் 2 கோடி இலவச வீடுகள் குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.