பங்குச்சந்தை கடந்த 3 நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனே கிட்டத்தட்ட 900 புள்ளிகள் வரை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை நிலவரம் குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை 9 மணிக்கு தொடங்கிய உடனே திடீரென கிட்டத்தட்ட 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை 890 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 36 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது
அதே போல் நிப்டி 260 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 17 ஆயிரத்து 300 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.