கேரளாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பாலக்காடு- ஷோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகமாக சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள பாலத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் மீது ரயில் மோதியதுடன், நான்கு பேரும் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லட்சுமணன், ராணி, வள்ளி உள்ளிட்ட மூவரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதுடன், இன்னொரு சடலத்தை ஆற்றில் தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நால்வரும் ஷொர்ணூர் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த போது ரயில் மோதி ஆற்றுக்குள் விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.