மேற்கு வங்க மாநிலத்தில், தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திரிணாமுல் மற்றும் பாஜக இடையே பெரும் போட்டி இருந்தது.
தற்போது, பாஜக மற்றும் மத்திய அரசு மீது முதல்வர் மம்தாவும் அவரது கட்சியினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில பெண்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்களைச் சந்தித்த திரிணாமுல் கட்சி நிர்வாகிகள் மீண்டும் தங்கள் கட்சியில் சேர வேண்டுமென்று வற்புறுத்தி, அவர்களை ஒரு சாலையில் விழுந்து வணங்கச் சொல்லி தண்டனை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் பரவலாகி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் செயலுக்கு பலரும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.