கர்நாடக சட்டப் பேரவையில் சற்றுமுன்னர் குமாரசாமி அரசு தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதனையடுத்து அவரது ஆட்சி கவிழ்கிறது
முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகியதால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இன்றைய வாக்கெடுப்பில் சபாநாயகர் வாக்களிக்கவில்லை. வாக்குகள் சமமாக இருக்கும்பட்சத்தில் சபாநாயகர் வாக்களிப்பார். ஆனால் அரசுக்கு எதிராக 6 ஓட்டுக்கள் அதிகம் கிடைத்ததால் சபாநாயகர் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை குமாரசாமி இன்னும் சிறிது நேரத்தில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.