தற்போது உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை நீக்குவதற்காக யூஜிசி செய்து திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிஸ்சி பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடை நீக்கி இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொது பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மாநில குழு யூஜிசி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் இடஒதுக்கீடு அவசியம் என ஒரு பிரிவும், இன்னொரு பக்கம் தரமான கல்விக்கு இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று ஒரு பிரிவும் கூறி வரும் நிலையில் யூஜிசி வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.