Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழகத்தில் எமர்ஜென்சி அமல்: அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது அவ்வளவு தான்!

தமிழகத்தில் எமர்ஜென்சி அமல்: அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது அவ்வளவு தான்!

தமிழகத்தில் எமர்ஜென்சி அமல்: அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது அவ்வளவு தான்!
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (15:59 IST)
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் உள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் மார்கண்டேய கட்ஜு தமிழக நலன் சார்ந்த விஷயங்களுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பார். தமிழர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவளித்து பல விஷயங்களுக்கு உதாரணமாக தமிழர்களை குறிப்பிடுவார்.
 
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக முன்னர் இருந்த மார்கண்டேய கட்ஜு தன்னையும் தமிழர் என பெருமையாக கூறி வருபவர். இவர் தற்போது டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார். கோரிக்கை நிறைவேறும் வரை காந்திய வழியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் கட்ஜூ.

 

 
 
இந்நிலையில் தமிழகத்தில் இப்போது உள்ள சூழல் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்கண்டேய கட்ஜு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட முடியவில்லை, 4, 5 பேர் தமிழகத்தில் எங்கு கூடினாலும் போலீசார் அவர்களை விரட்டுவதாக தனக்கு புகார்கள் வருவதாக கூறினார்.
 
மேலும், ஆர்டிகிள் 352-ன் கீழ், இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசர நிலையின் போது அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை, கருத்து உரிமை, ஆயுதங்கள் ஏதுமின்றி போராட்டம் நடத்தும் உரிமை போன்றவை பறிக்கப்பட்டது.
 
தற்போது தமிழகத்திலும் எமர்ஜென்சி அமலில் உள்ளது. ஆனால், அறிவிக்கப்படவில்லை அவ்வளவுதான். ஆயுதங்கள் ஏதுமின்றி அறவழியில் போராடுவது தமிழகத்தில் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார் மார்கண்டேய கட்ஜு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிற்கு செக் வைத்த சிறை நிர்வாகம் - அதிர்ச்சியில் அமைச்சர்கள்