உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தியை போலீஸார் அனுமதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் உத்தர பிரதேசத்திலும் நடைபெற்றது. அப்போது கலவரம் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. அங்கு நடந்த வன்முறையில் 15 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற மீரட் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சென்றுள்ளனர். ஆனால் நகருக்கு வெளிப்பகுதியிலேயே அவர்களை மறித்த போலீஸார் அவர்கள் உள்ளே நுழைய கூடாது என அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.