வடமாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் கனமழை மற்றும் பேரிடர் காரணமாக 72 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் உத்தரகாண்டில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும், 26 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.