சீனாவில் இருந்து உலக பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயில் இருந்து 1.80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளனர்.
இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேலே எழ ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் பொருளாதார நவடிக்கைகள் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாகவும், வர்த்தகம் மீண்டும் வேகமடைய வேண்டுமானால் நாம் அனைவருன் இணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.