தமிழக முதல்வர் உள்பட பல மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிக்கு மேற்கு வங்கத்தில் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்பதும் அவர் தனியாக தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் ஓரவஞ்சனை செய்வதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட ஒரு சில மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் மேற்கு வங்கம் மீது மத்திய அரசு காட்டும் பாகுபாடு குறித்து எனது எதிர்ப்பை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பதிவு செய்வேன் என்றும் அதற்காகவே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேபோல் தமிழக முதல்வர் உள்பட மற்ற மாநில முதல்வர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம் என கூறப்பட்டு வருகிறது.