நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது: வழக்கறிஞர் பேட்டி
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (07:59 IST)
நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கூறும்போது, தனது கட்சிக்காரர்களுக்கு இன்னும் நிறைய சட்டத்தீர்வுகள் உள்ளதாகவும், இன்னும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா ஆகியோர்கள் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க ஒவ்வொருவருக்கும் நான்கு என மொத்தம் 16 வாய்ப்புகள் இருந்ததாகவும் தற்போதும் நான்கு வாய்ப்புகள் மட்டுமே மீதமிருப்பதாகவும் அந்த வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குற்றவாளி வினய் சர்மா மற்றும் குற்றவாளி முகேஷ் சிங்கின் மறு சீராய்வு மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் குற்றவாளி அக்ஷய் தாக்கூரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மறு சீராய்வு மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல் குற்றவாளி பவன் குப்தாவுக்கு மூன்று வாய்ப்புகள் இருப்பதாகவும் அதையும் பயன்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளதால் திட்டமிட்டபடி மார்ச் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
அடுத்த கட்டுரையில்