Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்? கேரளா ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்? கேரளா ஆளுநருக்கு  உச்ச நீதிமன்றம் கேள்வி
, வியாழன், 30 நவம்பர் 2023 (15:36 IST)
பஞ்சாப் மாநிலம் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள ஆளுநர்களுக்கு எதிராக இரு  மாநிலங்களைச் சேர்ந்த அரசும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன.
 
இதில், இரு  மாநிலங்களைச் சேர்ந்த ஆளுர்களுக்கு கடுமையான கேள்வி எழுப்பி, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது ஏன் என்று சமீபத்தில்  உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, நெருப்புடன் விளையாடுகீர்கள் என்று எச்சரித்திருந்தது.
 
இந்த நிலையில்,  கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில்,  இம்மா நிலத்தில் ஆளு நராக ஆரிஃப்கான்   உள்ளார்.
 
இந்த நிலையில், கேரளம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல்  இருந்ததால், உச்ச நீதிமன்றத்தில் கேரளம் அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
 
இந்த வழக்கு விசாரணையின்போது,'' ஆளுநர் ஆரிஃப்கான் 2 ஆண்டுகாளக என்ன செய்துகொண்டிருந்தார்? இதுகுறித்து கேரளம் அரசுக்கு ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் ஆளு நரின் அதிகாரம் தொடர்பாக வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்க நேரிடும்'' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"திமுக மாடல் ரோடு", - விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி" - எடப்பாடி பழனிசாமி