Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பயனர்கள் தகவலை அரசிடம் வழங்க முடியாது: வாட்ஸ்அப் திட்டவட்டம்

பயனர்கள் தகவலை அரசிடம் வழங்க முடியாது: வாட்ஸ்அப் திட்டவட்டம்
, வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (14:27 IST)
மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் கேட்டுக் கொள்கிறோம் ஆனால் பயன்ர்கள் விவரங்களை மட்டும் அரசிடம் வழங்க முடியாது வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
வாட்ஸ்அப் செயலியை அதிகமான அளவில் நாடுகள் படியலில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் பணம் பரிமாற்றம் வசதியை முதல்முறையாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
 
ஆனால் மத்திய அரசிடம் சில கட்டுப்பாடுகளை இதற்காக விதித்தது. இதன்காரணமாக இந்த வசதி அறிமுகம் செய்ய தாமதமாகியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை தகவல்கள் மத்திய அரசிடம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 
 
மத்திய அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக கூறியிருந்த வாட்ஸ்அப் தற்போது இதுகுறித்து கூறியுள்ளாதவது:-
 
மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க முடியாது. பயனர்களின் விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்பதால் அவற்றை அரசிடம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜபோன் மாடலில் ஓப்போ ஸ்மார்ட்போன்: ரூ.14,990 மட்டுமே!