கூகுள் தேடலில் மிக மோசமான முதலமைச்சர் யார் என்ற தேடலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பெயர் வருவதால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2016ல் கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பினராயி விஜயன், கேரளாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின்போது அவர் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சபரிமலைக்குள் பெண்கள் தரிசனம் செய்ய அவர் ஆதரவாக செயல்பட்டார். இதனால் மக்கள் பலர் அவரை கடுமையாக தாக்கி பேசினர். மேலும் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் மக்களிடையே கணிசமாக சரியத் தொடங்கியது.
அதற்கு எடுத்துக்காட்டாக கூகுளில் மோசமான முதலமைச்சர் என்று தேடினால், பினராயி விஜயனின் பெயர் தான் வருகிறது. பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சபரிமலையின் மரபை, மாற்றம் என்ற பெயரில் சிதைத்தது எந்த வகையிலும் மன்னிக்கத்தக்கது அல்ல என்று காட்டமாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.