தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்தான நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஆந்திராவில் 10 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற போது ஆந்திர அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான எச்சரிக்கையை விடுத்தது
மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆந்திர அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்வு நடத்தி கொரோனாவால் மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அரசு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எச்சரித்தது
சுப்ரீம் கோர்ட்டின் இந்த எச்சரிக்கை காரணமாகத்தான் நேற்று ஆந்திர அரசு 10 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டது ஆந்திர மாநில வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது