பிரதமர் நரேந்திர மோடி பிற மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத்திற்கு மாற்றி விடுவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களாக குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் விளங்கி வருகின்றன. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை சமீபமாக மத்திய அரசு தங்களுக்கு ஆதரவான மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் குஜராத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டதாக சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களை முடித்துக்கட்ட பிரதமர் மோடி துடிக்கிறார். தெலுங்கானாவிற்கு வரவேண்டிய செமிகண்டெக்டர் தொழிற்சாலையை பிரதமர் அலுவலக அதிகாரிகள் குஜராத்திற்கு மடைமாற்றியிருக்கிறார்கள். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர். ஆனால் குஜராத்திற்கு பிரதமர் போல செயல்படுகிறார்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K