கொரோனா தொற்று இருப்பவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது உடலை பிரேதப் பரிசோதனை செய்யலாமா என்ற கேள்விக்கு ஐ எம் சி ஆர் பதிலளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி இறந்தவர்கள் உடலில் வைரஸ் வாழும் காலம் படிப்படியாக குறையும் என சொல்லப்பட்டாலும், அது எவ்வளவு காலம் என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. இது சம்மந்தமாக அப்படி இறந்தவர்களின் உடல்களை பினக்கூறாய்வு செய்யலாமா என்ற கேள்விக்கும் ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விளக்கம் அளித்துள்ளது.
அதில் ’கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய நபருக்கு, விபத்து, தற்கொலை அல்லது கொலை போன்ற அகால மரணம் நேர்ந்தால் போலிஸார் உதவியுடன் உடலை அறுக்காமல் பரிசோதனை செய்து, உடற்கூறாய்வு சான்று வழங்கப்பட வேண்டும். முழுதுமாக கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின் உடற்கூறாய்வு செய்வதும், பாதுகாப்பானது இல்லை.’ எனத் தெரிவித்துள்ளது.