மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சோதனை செய்துகொள்வதற்காக சென்ற பெண்ணிடம் அத்துமீறியுள்ளார் லேப் டெக்னீசியன் ஒருவர்.
நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் மக்களிடையே பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் தாமாகவே முன்வந்து பலரும் சோதனைகள் செய்து கொள்கின்றனர். அப்படி சோதனை செய்துகொள்ள சென்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அமராவதி பகுதியில் வேலை செய்யும் 24 வயதான பெண் ஒருவர் தன் சகப் பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனக்காக பரிசோதனை செய்துகொள்ள அருகில் இருந்த கொரோனா சோதனை மையத்துகு சென்றுள்ளார். அங்கிருந்த லேய் டெக்னீசியன், மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகளை எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிற்ப்புறுப்பில் இருந்தும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என சொல்ல விபரமறியடாத அந்த பெண் அதற்கும் சம்மதித்துள்ளார்.
இது சம்மந்தமாக தனது தோழி மற்றும் சகோதரரிடம் பகிர்ந்துகொள்ள அவர் மருத்துவர்களிடம் சென்று இதுபற்றி தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் மூக்கில் இருந்து சளி எடுத்தால் போதுமென்று சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் மீது புகாரளிக்க, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.