பெண் கவுன்சிலர்கள் இடையே அடிதடி.. மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!
டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இதில் பெண் கவுன்சர்களிடையே அடிதடி மோதல் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது என்பதும் சமீபத்தில் நடந்த மேயர் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் துணை நிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என ஆம் ஆத்மி போர்கொடி செய்த நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பெண் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மற்றும் பாஜக பெண் கவுன்சிலர்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஒருவரை ஒருவர் தண்ணீர் பாட்டில்களையும் காகிதங்களையும் சுருட்டி வீசிக்கொண்ட காட்சிகள் பார்க்க முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என பாஜக கவுன்சிலர்கள் கூறிய நிலையில் டெல்லி மேயர் அதனை மறுத்ததார்.
இதனை அடுத்து கவுன்சிலர்கள் விடாமல் கோஷமிட்டதால் ஒரு மணி நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.