ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் எங்களது வேலை எளிமையாகும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். காந்தி தலைவராக பொறுப்பேற்றவுடன் கட்சியின் செயல்பாடுகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்களது நோக்கம். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதால், இது எங்களுக்கு எளிதாகிவிடும். நாங்கள் எவ்வித் சிரமும் மேற்கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
யோகியின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தியை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பல்வேறு கண்டணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.