சைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்தை அக்டோபர் மாதம் முதல் ஒரு கோடி டோஸ் தயாரிக்க முடியும் என்று தகவல்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உலகத்தையே முடக்கியுள்ள நிலையில் இதுவரை இரண்டு அலைகள் பரவி பல லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. 20 கோடி பேர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் தடுப்பூசிகளை போட்டு வருகின்றன.
இந்தியாவில் இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு ஊசிகளும் போடப்பட்டு வரும் நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஸைடஸ் நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து தயாரித்துள்ள ஸைகோவிட் என்ற தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடலாம் என்பது இதன் சிறப்பு.
இந்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ள சைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்தை அக்டோபர் மாதம் முதல் ஒரு கோடி டோஸ் தயாரிக்க முடியும் என்று நம்புவதாக அதை உருவாகியுள்ள சைடஸ் காடில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் இந்தத் தடுப்பு மருந்து உருவாக்கப்ட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் மருந்துக்கு அடுத்து இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து இதுவாகும்.