Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கல்லை கரைத்திட உதவும் எளிய வழி!

அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கல்லை கரைத்திட உதவும் எளிய வழி!
சிறுநீரக கல் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம். நம் சித்தர்கள் எளிமையான  இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்துள்ளனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த பல இயற்கை வைத்திய முறைகளை நமக்கு தெரிவித்துள்ளனர். இதனை பயன்படுத்தி சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுவோரை காப்பாற்றுவது  எளிது.

 
வைத்திய முறை:
 
உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின்  மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
 
வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து  விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் 
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் முழுமாக நிரம்பியிருக்கும்.
 
அந்த நீரை அப்படியே ட்ரா வைத்து உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து  சாப்பிடுவது நலம்.
 
இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிகத்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து இருந்த இடம் தெரியாமல் போகும் என்று அனுபவ ரீதியாக பலர் உணர்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரிச்சம் பழ கேக் செய்ய...