நம் உடலில் நச்சுகள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. அவை குறைந்த அளவில் இருக்கும்போது பெரியஅளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அளவு அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும்.
அப்போது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தன்னுடைய இயக்கத்தை குறைத்துக்கொள்ளும். அது தொடரும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படும். அதன் மூலம் முதுமை விரைவுபடுத்தப்படும். இளமையிலேயே முதுமையான தோற்றம் உருவாகும். சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு அதிகரிக்கும். கழிவுகளால் சரும நோய்கள், மூட்டு வலி, காய்ச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும்.
பேதிக்கு மாத்திரை போடுவது போன்றவை இல்லாமல் இயற்கை முறையில் உணவின் மூலமே குடலை சுத்த்ம செய்தால் செய்தால் எந்த விதமான பக்க விளைவுகளும் உண்டாகாமல் தவிர்க்க முடியும்.
இஞ்சி சாறு வயிறு வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. சீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும்.
கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை எடுத்து வாருங்கள். இது மலச்சிக்கல், சரும ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் இரைப்பைக் வலி போன்றவற்றை போக்குகிறது.
உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.