கொத்தமல்லி: கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.
பாதாம்: பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
வெள்ளரிக்காய்: முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊறவைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.
பட்டை: பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி: ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி.
ஆலிவ் ஆயில்: 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
முள்ளங்கி: முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும்.