வெந்தய விதையை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலையில் தடவிவர முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். முடி உதிர்வதும் குறையும்.
காய்சலில் அவதிப்படுபவருக்கு வெந்தய விதையை அரைத்து பொடி செய்து தேநீர் தயாரித்து குடிக்கச் செய்தால் காய்ச்சல் தணியும்.
வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்காது. நீரிழிவுக்கான சிகிச்சையிலும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். தினமும் 25கி. வெந்தயத்தை உட்கொள்ள இரத்தத்தில் கூடிய சக்கரையின் அளவு குறையும்.
தொண்டைப் புண்ணுக்கு வெந்தய நீரைக் கொப்பளிக்க சரியாகும். தண்ணீரில் இரண்டு மேசைக் கரண்டியளவு வெந்தய விதையை இட்டு தணிவான தீயில் அரை மணி நேரம் காய்ச்சி எடுக்க வேண்டும், ஆறவிட்டு வடிகட்டி கொப்பளிக்க பயன்படுத்தலாம்.
வயிற்றில் ஏற்ப்படும் அழற்சிக்கும் வெந்தய தேநீர் மிகவும் நல்லது. குடல், சிறுநீரகம் மற்றும் சுவாசப் பாதையில் உண்டாகும் சளியை அகற்றும். குடற் புண்ணிலும் நற்பலன்களை வழங்கும்.
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.