Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெறும் வயிற்றில் திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

வெறும் வயிற்றில் திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது.  திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன்  தருவதாகும்.

 
* திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக  அமையும். 
 
* குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம்  பருகினால் குணம் பெறலாம்.
 
* 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல்  மட்டுப்படும். 
 
* அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும். 
 
* தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான  சக்தியும் தருவது திராட்சை. 
 
* காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும்  தீராத தொல்லைகள் தீரும்.
 
* மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது  நல்ல பலனளிக்கும்.
 
* குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவ பயன் நிறைந்தது திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருமல், மார்பு சளியை குணமாக்கும் சித்த மருத்துவ வைத்திய முறைகள்!