Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் !!

கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் !!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.


இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 
 
கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும். 
 
சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. கருணை கிழங்கு பசியின்மை பிரச்சனையை தீர்க்கும். வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சீராக்குவதோடு, பசியின்மை பிரச்சனையை தீர்க்கிறது. 
 
பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது.  இச்சமயங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 
 
தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை  விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. 
 
வாரத்திற்கு இரண்டு முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வெகு சீக்கிரத்தில் குறைவதை காணலாம். மேலும் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.
 
கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. எனவே வயிறு, இரைப்பை புற்று ஏற்படாமல் தடுக்க உணவில் கருணைக்கிழங்கு அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி !!