நமது உடல் எடையில் சில கிலோக்களை குறைப்பதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இதயம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
பீட்ரூட்டில் இயற்கையாகவே இருக்கும் நைட்ரேட்டினால் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். ஒரு நாளில் 250 மில்லி பீட்ரூட் சாறு குடிப்பதனால் ரத்த அழுத்தத்தை 7 சதவீதம் அளவிற்கு குறைத்திட முடியும்.
முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
100 கிராம் சீரகத்தை 200 மி.லி., கரும்புச் சாற்றில் கலந்து, பெரிய பாத்திரத்தில் வைத்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்க வேண்டும். பின்னர் காய்ந்த சீரகத்துடன் 100 மி.லி., எலுமிச்சைச் சாறு சேர்த்து, முன்னர்போல் பாத்திரத்தில் வைத்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு கிராம் அளவு காலையும் இரவும் உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும்.
தினமும் டீ,காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்தால் இரத்த அழுத்தம் குறையும்.
வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும். அகத்தி கீரையை தினமும் மதியம் மற்றும் இரவு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்.
தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. தவிர இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.