திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.
சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.
நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.
நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அருந்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்.
10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.
மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.