Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மருத்துவகுணம் கொண்ட பதநீரால் ஏற்படும் நன்மைகள் !!

மருத்துவகுணம் கொண்ட பதநீரால் ஏற்படும் நன்மைகள் !!
கோடை காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை செய்வதை பார்க்கலாம்.

பதநீர் சர்க்கரை சத்து நிறைந்தது என்பதால் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். கழிவு அகற்றியாகவும், வியர்வை  அகற்றியாகவும் செயல்படும். இதனுடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது.
 
எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம். உடல்  மெலிந்தவர்களுக்குச் சிறந்த டானிக்.
 
வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும். பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்து புளிக்க  வைத்து, ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் சீக்கிரம் குணமாகும்.
 
பதநீர் நம் சீதோஷ்ண நிலைக்கு மிகச்சிறந்த பானம். உடல் சூட்டை உடனே தணித்து குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. ரத்த சோகையை போக்கும். பதநீரில்  லாக்டோர்ஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு, கால்சியம், புரோட்டீன் சத்துக்களும் உள்ளன.
 
வைட்டமின் பி சத்து கொண்டுள்ள பதநீர் பித்தத்தை நீக்கி இருதயத்தை வலுவுள்ளதாக ஆக்கும். பதநீரில் உள்ள கால்சியம் சத்து பற்களை பலப்படுத்தும்.  கோடையில் கிடைக்கும் மாம்பழம் சாப்பிடுவதால் உடல் சூடு ஆகும். ஆனால் இனிப்பு மாம்பழங்களை துண்டு துண்டுகளாக நறுக்கி பதநீரில் போட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். உடல் சூடும் நீங்கும்.
 
பதநீரானது இயற்கை நமக்கு தந்த இயற்கையான சத்தான பானம். கோடையில் கலப்படமில்லாத பதநீர், இளநீர் போன்றவை உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை  ஈடு செய்யும் அருமருந்தாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வெள்ளை வெங்காயம் !!