குழந்தைகளை காய்ச்சல் நேரத்தில் பராமரிக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்...!!
குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் பதற்றம் நீங்கி தைரியமாக குழந்தையைப் பராமரிக்க முடியும். அவற்றைப் பற்றி விளக்கமாக இங்கு காணலாம்.
ஏசியில் குழந்தையை படுக்கவைக்க கூடாது. சாதாரண ஃபேன் காற்றில் படுக்க வைக்க வேண்டும். குழந்தைக்கு அதிகமான லேயர் கொண்ட உடைகள் அணிந்திருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். ஒரே ஒரு துணியை அணிந்திருக்கும்படி செய்யுங்கள். காட்டன் துணியாக இருப்பது நல்லது. மெர்குரி உள்ள தர்மாமீட்டரை குழந்தைக்கு பயன்படுத்த கூடாது. இது குழந்தைகளை பாதிக்கும்.
0-5 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், 101-க்கு மேல் அதிகம் போக கூடாது. அப்படி போனால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும். 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, 102-க்கு மேல் அதிகம் போக கூடாது. அப்படி போனால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.
குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும். உடலிலும் ஈரத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்கவேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
குழந்தைக்கு திரவ உணவுகளை கொடுத்திட வேண்டும். 0-6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அதிக அளவில் கொடுப்பது நல்லது. 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால், சுத்தமான தண்ணீர், பழச்சாறு கொடுக்கலாம். மருத்துவர் பரிந்துரைத்து இருந்தால் சலைன் டிராப்ஸை குழந்தையின் மூக்கில் போடலாம்.
வெங்காயத்தை அறிந்து அதைக் குழந்தையின் உள்ளங்காலில் 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த சிகிச்சையை செய்யலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும்.
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பவுடரை குழந்தை குளிக்கும் இளஞ்சூடான தண்ணீர் டப்பில் போட்டு அந்த தண்ணீரில் குழந்தையை 10 நிமிடம் வைத்திருக்கலாம். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் அதனுடன் இஞ்சி சாறை 4 சொட்டு கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம்.
அடுத்த கட்டுரையில்