Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சீராக இயங்குவதற்கு உதவும் கமலா ஆரஞ்சு !!

கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சீராக இயங்குவதற்கு உதவும் கமலா ஆரஞ்சு !!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (11:40 IST)
ஆரஞ்சு பழம் போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. கமலா ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமில்லாமல் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் உள்ளன.


கமலா ஆரஞ்சு மிகக் குறைவான அளவு கலோரி கொண்ட பழமாக இருந்தாலும் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது. அவை
கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

கமலா ஆரஞ்சு கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது. உடலில் பொட்டாசியம் சத்து குறையும் போதுதான் இதய சம்பந்தமான பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிகின்றன

கமலா ஆரஞ்சு பழத்தில் உள்ள போட்டாசியம் மற்றும் இரும்பு சத்து இதய சுவர்களை பலப்படுத்துவதன் மூலம் இதயத்தை பாத்துக்காக்கிறது.

கண் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய கரோட்டினாய்டுகள் என்னும் வேதிப்பொருள் விட்டமின் ஏ சத்தாக மாறி கண் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் டிராகன் பழம் !!