இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என, மூன்று சுவைகளைக் கொண்டது இந்த கொடுக்காப்புளி.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது இந்த கொடுக்காப்புளி. அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடெண்டுகளை கொண்டது. இது உடலில் இருக்கக்கூடிய, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
இதன் காரணமாக, காய்ச்சல், பரவக்கூடிய வைரஸ் மற்றும் தொற்று நோய், மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை போன்ற வைரஸ் கிருமிகள்ல இருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த கொடுக்காப்புளி.
கொடுக்காப்புளி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள், அதிகம் கொண்டது என்பதினால் இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.
செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளான, அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் போன்ற சத்துக்கள், குடலின் உட்பகுதியில் இருக்கக்கூடிய கழிவு வெளியேற்றுவதோடு குடல் புண்களையும் ஆற்றும்.
செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் வந்து குணமாக்குவதற்கு மிக உதவியாக இருக்கிறது கொடுக்காப்புளி. அதிக கொலஸ்ட்ரால் மற்றும், அதிக உடல் எடையினால் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது. இந்த கொடுக்காப்பிளி.