Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

செரிமான கோளாறை சரிசெய்ய உதவும் மருத்துவ குறிப்புகள் !!

Ginger
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (14:45 IST)
அதிகமாக அடிக்கடி செரிமான கோளாறால் பாதிக்கப்பட்டு புளித்த ஏப்பம் விடுவோர் ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு மற்றும் புளித்த ஏப்ப சரியாகிவிடும்.


உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது. எலுமிச்சை: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.

இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் உதவும். பெருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது நீருடன் கலந்து சாப்பிடலாம்.

செரிமான பிரச்சனையால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு, வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அந்த பிரச்சினை சரியாகிவிடும். இதனால்தான், சாப்பிட்ட பிறகு வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம். நெல்லிக்காய்: நாளுக்கு ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும்.

ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த இலவங்கப்பட்டை உதவும். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேநீரில் கலந்து நாளுக்கு 2-3 முறை அருந்தலாம்.

அஜீரணக் கோளாறால் வயிறு உப்பசம் ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஜாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் 100கிராம் எடுத்துக்கொண்டு, அதை பொடி செய்து சாப்பிடுவதற்கு முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள் !!