Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்கள் நிறைந்துள்ள கடுகு !!

உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்கள் நிறைந்துள்ள கடுகு !!
கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகைகள் உண்டு. இது இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் அதிகமாக இருக்கும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

கடுகு இருமலுக்கு மிக சிறந்த மருந்தாகும். கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது.
 
கடுகுக்கு என்று தனி சுவை கிடையாது. இந்திய சமையலில் சூடான எண்ணெயில் கடுகு பொரிக்கும்போது, அதன் மேல் தோல் அகற்றப்படுகிறது.
 
கடுகில் செலினியம், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை மிகுதியாக காணப்படுகிறது.

மேலும் இதில் போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில்  உள்ளன.
 
கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது, இதனால் கட்டிகள் விரைவில் கரைந்து புண் விரைவில் ஆறும். கடுகு  விதைகளில், உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்கள் உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
 
கடுகு அதிக கலோரி ஆற்றலை தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து, உடல் பருமன் அடைவதில் இருந்து பாதுகாக்கும்.
 
நியாசின் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு  செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் உதவி புரிகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீரணக்கோளாறுகளை போக்கும் சீரக பொடியின் அற்புத மருத்துவ குணங்கள் !!