திருநீற்று பச்சிலை எனப்படும் ஒரு வகையான துளசி செடியின் விதையே சப்ஜா விதை என்று சொல்லப்படுகின்றது.
உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டு சக்கரை கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது.
சப்ஜா விதையில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதனால் ஒரு தேக்கரண்டி ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
மூல நோயினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இது உதவும்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறிய சப்ஜா விதையை குடித்து வந்தால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் உடல் எடையும் குறையும்.
உடலில் சக்கரையின் அளவை குறைக்க விரும்புவோர் தினமும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர உடலில் சக்கரையின் அளவு குறையும்.