சக்கரவர்த்தி கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.
சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து உடலில் மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்வதால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.
சக்கரவர்த்தி கீரை வயிற்றுப் புண்களை சரி செய்யும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
சக்கரவர்த்தி கீரையை தொடர்ந்து உணவோடு எடுத்து கொண்டால் சிறுநீரக கற்களை கரைக்கும், நோய் தொற்றுக்களை போக்கும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும், வயிற்று புண்ணை குணமாக்கும் மற்றும் ரத்த சோகையை சரிசெய்யும்.
சக்கரவர்த்தி கீரையானது புற்றுநோயை தடுக்கவல்லது, மேலும் இந்த கீரை, எலும்புகளை பலமடைய செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்துகள் தயாரிக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
கால்சியம் சத்து நிறைந்த இது, எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியது. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.