செடி முழுவதுமுள்ள தண்டு, வேர், மற்றும் இலைகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியவையாக உள்ளது. இக்கீரையில் புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு உள்ளிட்ட நான்கு சுவைகளும் உண்டு.
கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் கண்பார்வை அதிகமாகும்.
கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படும். மேலும் இம்மூலிகை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையது. மேலும் கல்லீரலை பாதுகாக்கும்.
கையளவு கீழாநெல்லி இலையை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இருவேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து மையாக அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.