Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வீட்டிலேயே செரிமான பிரச்சனையை எளிதில் தீர்ப்பதற்கான வழிகள்...!!

வீட்டிலேயே செரிமான பிரச்சனையை எளிதில் தீர்ப்பதற்கான வழிகள்...!!
தினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவு சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது.  மேலும் வயிறு உப்பசம் குறையும்.
இஞ்சியில் உள்ள அமிலம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. தினந்நோறும் இஞ்சியை சிறு துண்டாகவும் உண்டு வரலாம் அல்லது இஞ்சி  டீயாகவும் பருகலாம்.
 
உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு ஓமத்தை மென்று சாதாரண நீர் அல்லது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சீராகும். தினமும் ஒரு லவங்கத்தை சாப்பிடுவதாலும், இரண்டு லவங்கத்தை நீரில் கொதிக்கவைத்து சிறிது தேன் கலந்து குடித்துவர செரிமானம் சீராகும்.
 
பட்டையில் உள்ள மருத்துவ குணமானது செரிமானப் பாதயில் உள்ள கோளாறுகளை சரிசெய்து ஜீரணத்தை சுலபமாக்குகிறது. தினமும்  தமான சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் ஏற்படாது.
 
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்,    நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.
 
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. மேலு சாப்பிட்ட உடன் தேநீர் அருந்துவதால், இவற்றில் உள்ள அமிலங்கள் உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்த்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடுகிறது.
 
சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிடுவதால் இவை வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..?