Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சையில் உள்ள நன்மைகளை அறிவோம்

மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சையில் உள்ள நன்மைகளை அறிவோம்
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும்போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால்  கிடைக்கும் பயன்களை பற்றி பார்ப்போம்.

 
சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையைஅருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.
 
மிகுந்த சோர்வு நிலையில் இருப்பவர்கள் எலுமிச்சை வேகவைத்த நீரை குடித்தால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல்  கிடைக்கும்.
 
எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.
 
எலுமிச்சை வேகவைத்த நீர் உடலின் மெட்டபாலிசத்தின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல்  தடுக்கிறது.
 
எலுமிச்சையிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம்ஏற்படுவது தடுக்கப்படும். எமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது.
 
எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.  அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள்  காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.
 
எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை  அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரியில் கொலு வைத்து வழிபாடு செய்வது ஏன் தெரியுமா?