தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் - 2 துண்டு
செய்முறை:
சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
பப்பாளிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும். தயிரை ஒரு துணியில் கட்டி அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை தொங்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பப்பாளிக்காய் விழுது, சிக்கன், எலுமிச்சை சாறு, பூண்டு இஞ்சி விழுது, கேசரி பவுடர், மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தயிர் சேர்த்த நன்றாக பிரட்டி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில்லிலோ லேசாக எண்ணெய் தடவி திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சூப்பரான தந்தூரி சிக்கன் தயார்.