Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொலை ‌மிர‌ட்‌ட‌ல் உ‌ள்பட 5 ‌பி‌ரி‌வி‌ல் வழ‌க்கு‌ப் ப‌திவு - கைதா‌கிறா‌ர் மு.க.ஸ்டாலின்?

கொலை ‌மிர‌ட்‌ட‌ல் உ‌ள்பட 5 ‌பி‌ரி‌வி‌ல் வழ‌க்கு‌ப் ப‌திவு - கைதா‌கிறா‌ர் மு.க.ஸ்டாலின்?
, வெள்ளி, 2 டிசம்பர் 2011 (08:48 IST)
முன்னாள் துணை முதலமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின், அவரது மக‌ன் உதய‌நி‌தி ‌ஸ்டா‌லி‌ன் உ‌ள்பட 5 பே‌ர் மீது கொலை மிரட்டல் உ‌ள்‌ளி‌ட்ட 5 ‌பி‌ரிவுக‌ளி‌ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா‌ல் அவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையை சேர்ந்த என்.எஸ்.குமார் எ‌ன்பவ‌ர் காவ‌ல்துறை ஆணைய‌ர் திரிபாதியை கடந்த 29ஆ‌ம் தேதி ச‌ந்‌தி‌த்து கொடு‌த்த புகா‌ர் மனு‌வி‌ல், எனக்கு சொந்தமான இர‌ண்டரை கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன்.

அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார். எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ஐ‌ந்தரை கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.

என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர். தற்போது அந்த வீட்டில் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வசிக்கிறார்.

என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து எனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர். எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் எ‌ன்று புகார் மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த புகார் மனு மீது கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌ நே‌ற்‌றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து‌ள்ளன‌ர்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க‌ாவ‌ல்துறை‌யின‌ரி‌‌ன் இ‌ந்த நடவடி‌க்கையா‌ல் மு.க.‌ஸ்டா‌லி‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 5 பேரை கைது செ‌ய்ய நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வருவதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

Share this Story:

Follow Webdunia tamil