Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

1.42 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம்!

1.42 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம்!
, சனி, 13 ஆகஸ்ட் 2022 (10:23 IST)
தொடர் விடுமுறையால் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம்.


நாடு முழுவதும் ஆகஸ்டு 15 திங்கட்கிழமை அன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை உள்ள நிலையில் திங்கட்கிழமையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையிலிருந்து செல்லும் அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி , மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதோடு சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகளை 100% இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்களது பணி ஒதுக்கீட்டின்படி குறித்த நேரத்தில் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடைசி பேருந்துகள், இரவு பேருந்துகளை தாமதம் இன்றி உரிய முறையில் இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கோடி மாணவர்கள் பாடிய தேசியகீதம்! – ராஜஸ்தான் சாதனை!